ஐ.பி.எல் வரலாற்;றில் முதல் முறை நிகழ்ந்த சம்பவம்.. திடீரென அஷ்வின் வெளியே ஓடியது தொடர்பில் கேப்டன் சஞ்சு ஓபன் டாக்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 20-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் அந்த அணி 10 ஓவர்களிலேயே 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது களமிறங்கிய ஹெட்மையர் மற்றும் தமிழக வீரர் அஸ்வின் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி 2 ஓவர்கள் இருந்த நிலையில், அஸ்வின் 28 ரன்கள் எடுத்திருந்தபோது ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.

அதன் பின்னர் வந்த இளம் வீரர் ரியான் பராக் சிறிதளவு கைகொடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. மேலும் புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியது. ஐபிஎல் வரலாற்றிலேயே ரிட்டையர்டு அவுட் ஆகி வெளியேறிய முதல் வீரர் அஸ்வின் தான். இந்நிலையில் இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்துள்ளார் அதில்,

‘அஸ்வின் அந்த நேரத்தில் ரிட்டயர்டு அவுட் ஆக வேண்டும் என்பதை நாங்கள் ஒரு அணியாக எடுத்த முடிவுதான். ஏனெனில் இந்த சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இதுபோன்ற சூழ்நிலை வந்தால் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து நிறைய பேசியுள்ளோம்’ என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.