நான் போறன் பேன்ஸ்.. ஜடேஜாவின் கேப்டன்ஷியில் தலையீடு செய்யும் டோனி. கேப்டன்ஷியில் இருந்து விலகும் ஜடேஜா ?

Cricket

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை ரவீந்திர ஜடேஜா எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன்சியில் தோனியின் தலையீடு, சுதந்திரமாக தனது போக்கில் கேப்டனாக செயல்படமுடியாதது, தொடர் தோல்விகள் ஆகியவற்றால் தளர்வடைந்து போயிருக்கும் ஜடேஜா, அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி தோற்கும் பட்சத்தில் கேப்டன்சியை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி கேப்டன்சியிலிருந்து விலகினாலும், சிஎஸ்கே அணியை பொறுத்தமட்டில் முக்கியமான முடிவுகளை அவர் எடுப்பார் என்பதும், களத்தில் இக்கட்டான, நெருக்கடியான சூழல்களில் கேப்டன் ஜடேஜாவிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதுதான்.

இந்த சீசனில் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி ஆடிவருகிறது. ஜடேஜாவின் கேப்டன்சியில் இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு படுமோசமாக தொடங்கியுள்ளது. முதல் 4 போட்டிகளிலுமே தோல்வியடைந்தது சிஎஸ்கே. கேகேஆரிடம் தோற்ற சிஎஸ்கே அணி, லக்னோ அணிக்கு எதிராக 210 ரன்கள் அ டித்தும், அந்த ஸ்கோருக்குள் லக்னோ அணியை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவியது. பஞ்சாப் கிங்ஸூக்கு எதிரான போட்டியில் 181 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி.

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதை மிகவும் நெருக்கடியான அல்லது தேவையான சூழல்களில் மட்டும் அவரது லிமிட்டில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் தோனியின் செயல்பாடு அதிகமாக இருந்தது. இதுவரை ஆடிய போட்டிகளில் கிட்டத்தட்ட தோனி தான் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். ஜடேஜா வெறும் பெயரளவில் கேப்டனாக நியமிக்கப்பட்டதுபோலவே தெரிந்தது. ஜடேஜா பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்ய, தோனி தான் சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் செட்டப், வீரர்களுக்கு ஆலோசனை ஆகிய அனைத்தையும் செய்தார். அதைக்கண்ட முன்னாள் வீரர்களும் வர்ணனையாளர்களுமான அஜய் ஜடேஜா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக அணி நிர்வாகம் கூட்டம் போட்டு, கேப்டன்சியை முழுக்க முழுக்க ஜடேஜாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று முடிவு செய்து தோனியிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனாலும் தோனி தான் கேப்டன்சி செய்கிறார். கேப்டன்சியில் தோனியின் தலையீடு, சுதந்திரமாக தனது போக்கில் கேப்டனாக செயல்படமுடியாதது, தொடர் தோல்விகள் ஆகியவற்றால் தளர்வடைந்து போயிருக்கும் ஜடேஜா, அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி தோற்கும் பட்சத்தில் கேப்டன்சியை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.