என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதனை… பங்களாதேஷூடன் வெற்றிபெற்று இந்தியாவுக்கு பின்னால தள்ளி 2வது இடத்தை கைப்பற்றிய சவுத் ஆபிரிக்கா – முழு அட்டவணை உள்ளே

Cricket

சர்வதேச கிரிக்கெட் பேரவை எனப்படும் ஐ.சி.சி யானது ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்ற ஒரு தொடரை நடத்தி வருகிறது. இதில் பல தொடர்கள் நடைபெற்றுவரும் நிலையில் தென்னாப்பிரிக்கா – வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 2வது டெஸ்ட்டில் 332 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

இந்த தொடருக்கு முன்பாகவும் தென்னாப்பிரிக்க அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் தான் இருந்தது. இப்போதும் 2ம் இடத்தில் தான் இருக்கிறது. ஆனால் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி விகிதம் 60 சதவிகிதத்திலிருந்து 71.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 75 சதவிகித வெற்றி விகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை விட வெறும் மூன்றரை சதவிகிதம் மட்டுமே தென்னாப்பிரிக்கா பின் தங்கியுள்ளது.

இந்திய அணி 58.33 சதவிதத்துடன் 3ம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 52.38 சதவிகிதத்துடன் 4ம் இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.