‘உண்மையை கூற வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரை நான் ஒரு வெற்றியாக தான் பார்த்தேன்.’ – 2022 ஐ.பி.எல் தொடரில் இடம்பெறாமைக்கான ஆதங்கத்தை வெளிப்படுத்திய மோர்கன்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரையில் 20-க்கும் மேற்பட்ட போட்டிகள் நிறைவுபெற்றுள்ளன. ஒவ்வொரு போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் தலைவரான இயான் மோர்கன் இடம்பெறவில்லை. இது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் நடப்பு தொடருக்கான ஏலத்தில் தான் தெரிவாகாதது குறித்து இயன் மோர்கன் பேசியுள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயான் மோர்கன், கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் அணித்தலைவராக செயல்பட்டு வந்தார்.

ஆனால் பேட்டிங்கில் அவர் பெரிதளவில் சோபிக்கவில்லை. எனினும் தனது அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். அதன் பின்னர், 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின்போது கொல்கத்தா அணி அவரை தக்க வைக்கவில்லை. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தன்னை எடுக்காதது குறித்து மோர்கன் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘உண்மையை கூற வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரை நான் ஒரு வெற்றியாக தான் பார்த்தேன். உலகின் மிகப் பெரிய தொடர் ஒன்றில் பங்கேற்ற அனுபவத்தை பல ஆண்டுகளாக நான் எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டேன்.

மேலும் அதன் மூலம் சிறந்த நினைவுகளையும், அனுபவங்களையும் பெற்றிருக்கிறேன். சிறப்பான குடும்பத்துடன் வீட்டில் அழகான காலகட்டத்தை அனுபவித்தேன். அதனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரும் உலகக் கோப்பை தொடரைப் பார்க்கிறேன். நான் மீண்டும் விளையாட தொடங்கினால் அது உலகக் கோப்பைக்குப் பிறகு நிற்காது’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.