2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரையில் 20-க்கும் மேற்பட்ட போட்டிகள் நிறைவுபெற்றுள்ளன. ஒவ்வொரு போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேஅணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது.
அதேவேளையில் சிஎஸ்கே அணியில் முன்னதாக விளையாடிய டு பிளசிஸ், ஜோஸ் ஹசில்வுட் ஆகியோர் பெங்களூரு அணிக்காக விளையாடுகின்றனர். இது சிஎஸ்கே அணிக்கு சற்று சவாலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மைதானத்தில் பயிற்சிகாக சென்ற பாப் டு பிளசிஸ், சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ உள்ளிட்டோரை ஓடிச்சென்று கட்டித்தழுவினார். மிகுந்த உற்சாகத்துடன் அவர்களிடம் பேசி மகிழ்ந்தார். அதேபோல் விராட் கோலியும் தோனி, ஜடேஜாவை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
Their bond 🥰❤️💛#cskvsrcb #IPL2022 pic.twitter.com/UDtG5IHISf
— . (@ThoufMSD) April 11, 2022