இப்பவே கோப்பையை சி.எஸ்.கே பேருல எழுதி வைங்க.. 4 தொடர் தோல்வியின் வலியையும் மொத்தமாக பெங்களுர் அணியிடம் காட்டிய சி.எஸ்.கே… பேட்டிங்கில் டுபே, பவுலிங்கில் தீக்ஷன…

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் வரிசையாக 4 தோல்விகளை சந்தித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5ஆவது போட்டியில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. 15வது ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

இதன்பின் களத்திற்கு வந்த மொய்ன் அலி 3 ரன் எடுத்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து கூட்டணி சேர்ந்த ராபின் உத்தப்பா – சிவம் துபே ஜோடி தங்களது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டனர். 10 ஓவர் வரை பொறுமையாக விளையாடிய இந்த ஜோடி, 11வது ஓவருக்கு மேல் அடித்து விளையாட துவங்கியது. பெங்களூர் அணியின் பந்துவீச்சை போட்டி போட்டி நாளாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி மளமளவென ரன் குவித்தது.

50 பந்துகளில் 9 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்த போது ராபின் உத்தப்பா விக்கெட்டை இழந்தார். இதன்பின் வந்த ஜடேஜா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தாலும், இறுதி பந்து வரை ஆட்டமிழக்காத சிவம் துபே 46 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் குவித்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 216 ரன்கள் குவித்துள்ளது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹசில்வுட் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

217 என்ற இமாலய இலக்கை துரத்தி பதிலுக்கு களமிறங்கிய பெங்களுர் அணி இடைஇடையில் விக்கெட்களை பறிகொடுக்க குறித்த இலக்கை அடைய முடியாமல் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் சென்னை அணியில் விளையாடிய இலங்கை வீரர் மஹேஸ் தீக்ஷன 4 விக்கெட்களை பதம் பார்த்தார். 4 தொடர் தோல்விகளின் பின்னர் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணி 23 ஓட்டங்களினால் வெற்றியை சுவைத்தது.

 

Leave a Reply

Your email address will not be published.