முழு உலகமுமே டோனியை கடவுளாக போற்றுவதற்கு இந்த ஒரு வீடியோவே போதும். அந்த மனசுக்கு தான் இவ்ளோ மரியாதை !

Cricket

ஆர்.சி.பி மற்றும் சி.எஸ்.கே அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் சிஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி செய்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்போட்டியில் பெங்களூரு அணியின் இளம் வீரர் பிரபு தேசாய் 18 பந்துகளில் 34 ரன்களை விளாசி சிஎஸ்கேவுக்கு தலைவலி தந்து கொண்டிருந்தார். அப்போது பிராவோ வீசிய 14-வது ஓவரில் பந்து ஒன்றை தூக்கி அ டிக்க அது கேட்ச்சானது. மிகவும் சுலபமாக வந்த அந்த கேட்சை இளம் வீரர் முகேஷ் சௌத்ரி தவறவிட்டார்.

இதனைத் தொடர்ந்து 15-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் கொடுத்த கேட்சையும் முகேஷ் சௌத்ரி தவறவிட்டார். இது சிஎஸ்கே வீரர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீப காலமாக பினிஷிங் ரோலில் தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முன்னதாக நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த பெங்களூரு அணியை கடைசி வரை விளையாடி தினேஷ் கார்த்திக் தான் வெற்றி பெற வைத்தார்.

அதேபோல் நேற்றைய போட்டியிலும் திடீரென தினேஷ் கார்த்திக் அதிரடி காட்ட ஆரம்பித்தார். அதுவும், முகேஷ் சௌத்ரி வீசிய 17-வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர், 1 பவுண்டரில் விளாசினார். அதனால் ஆட்டம் மெதுவாக பெங்களூரு பக்கம் திரும்புவது போல் இருந்தது. ஏற்கனவே தினேஷ் கார்த்திக் கேட்சை தவறவிட்டு, பின்னர் பவுலிங்கிலும் ரன்களை முகேஷ் சௌத்ரி வாரி வழங்கினார். இதனால் சமூக வலைதளங்களில் அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த சூழலில் பதற்றமாக இருந்த முகேஷ் சௌத்ரியிடம் சென்ற தோனி, அவரின் தோள் மீது கைபோட்டு அறிவுரை வழங்கினார். இரண்டு முக்கியமான கேட்ச்களை தவறவிட்ட பின்பும், பொறுமையாக இளம் வீரரை தோனி அரவணைத்து சென்றது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.