மும்பை அணியை கலாய்க்கும் ரசிகர்களே கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பாருங்க… 2014ஆம் ஆண்டு ப்ளேஆப் போனதை போன்று ஜாக்பொட்டியில் 2022 ஐ.பி.எல் ப்ளேஆப் போகும் மும்பை – புள்ளிவிபரம் உள்ளே

Cricket

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் 5 தடவைகள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள் நிலையில் எஞ்சிய 9 போட்டியில் 8 போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு என்ற இக்கட்டான நிலைக்கு மும்பை தள்ளப்பட்டுள்ளது. ஆனால் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இதே போன்று மும்பை அணி சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 5 போட்டியில் தோல்வியை தழுவியது. பின்னர் எஞ்சிய 9 போட்டியில் 7 ஆட்டங்களில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

ஆனால், புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் மட்டுமே பிடித்ததால் எலிமினேட்டர் சுற்றில் மட்டுமே மும்பை விளையாடியது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோல்வியை தழுவிய மும்பை, தொடரிலிருந்து வெளியேறியது. தற்போது அதே போல ஸ்கிரின்பிளே மாறியுள்ளது. 2014ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி 11 போட்டியில் வென்று 22 புள்ளிகளுடன் இருந்தது. கொல்கத்தா 9 வெற்றிகளுடன் 2வது இடத்திலும், சிஎஸ்கேவும் 9 வெற்றியுடன் 3வது இடத்திலும் இருந்தது.

7 வென்றால் போதும் முதல் 3 அணிகள் அதிக வெற்றியை பெற்றதால், அந்த தொடரில் 4வது இடம் பிடிக்கும் அணி 14 புள்ளியை பெற்றாலே போதும் என்ற நிலை உருவானது. அப்போது தொடர்ந்து 5 போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை, எஞ்சிய 9 போட்டியில் 7 ஆட்டங்களில் வென்றது. இதனால் மும்பை, ராஜஸ்தான் என 2 அணியும் 14 போட்டிகளில் இருந்தன. இதனால் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது, தற்போதும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி அதிக வெற்றியை பெற்றால், 4வது இடம் பிடிக்கும் அணிக்கு சுலபமாகிவிடும்.

ஆனால் இம்முறை 10 அணிகள் பங்கேற்பதால் பந்தயம் இன்னும் கடுமையாகும். இதனால் ரன் ரேட் மிகவும் முக்கியம். இதனால் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது மும்பைக்கு இன்னும் பிளே ஆப் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.