2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமான தொடர் தற்போது ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் புதிய அணியான ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மிக சிறப்பாக விளையாடி வருகிறது. போட்டியில் துணிச்சலான முடிவு எடுத்து அணியை சிறப்பாக வழிநடத்துகிறார் ஹர்திக் பாண்ட்யா, என, ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் செயல்பாடு குறித்து சகவீரர் ரஷித் கான் கூறுகையில், ஷஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தும் விதம், களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சகவீரர்களை கையாளும் விதம் வியக்க வைக்கிறது.
போட்டியில் துணிச்சலாக முடிவு எடுக்கும் இவரது நம்பிக்கை சற்றும் குறையவில்லை. இதற்கு இவரது தெளிவான மனநிலை முக்கிய காரணம். இதனால் தான் போட்டியில் இக்கட்டான நேரத்தில் இவரால் சரியான முடிவு எடுக்க முடிகிறது. தவிர, பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்த வீரராகவும் வலம் வர முடிகிறது, என்றார்.