கடல்லயே இல்லையாம்… நிம்மதியா வீட்ட போயி குடும்பத்தோட எஞ்ஜாய் பண்ண ரெடியான மும்பை வீரர்கள். மும்பை மேட்ச்ன்னு வந்துட்டா ராகுலை பிடிக்க முடியாது. 

Cricket

லக்னோ அணிக்கெதிரான போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை வரிசையாக குவித்துள்ள நிலையில் ப்ளேஓப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. முதலில் களமறிங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் கே.எல்.ராகுல், குவின்டன் டி காக் ஆகியோர் ஓபனர்களாக இருந்தனர். ராகுலும், டி காக்கும் செட்டில் ஆனப் பிறகு பும்ராவை கொண்டு வந்தார். அந்த ஓவரில் நிதானமாக விளையாடிய அவர்கள் அடுத்து காட்டடி அ டிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக, இது ராகுலுக்கு 100ஆவது போட்டி என்பதால், பெரிய ஸ்கோர் அ டிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருந்தார். 

இந்நிலையில் சிறப்பாக விளையாடி வந்த குவின்டன் டி காக் 24 (13) ரன்கள் எடுத்து, பாபியன் ஆலன் பந்துவீச்சில் அவுட் ஆனார். இந்நிலையில் 18.5ஆவது ஓவரின்போது ராகுல் சதமடித்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 199-4 ரன்களை குவித்து அசத்தியது. ராகுல் 101 (60), தீபக் ஹூடா 15 (8) இருவரும் கடைசி ஓவர்வரை களத்தில் இருந்தார்கள். இலக்கை துரத்திக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் வழக்கம்போல ஓபனர்கள் இஷான் கிஷன் 13 (17), ரோஹித் ஷர்மா 6 (7) இருவரும் படுமோசமாக சொதப்பினார்கள். 

அடுத்து டிவோல்ட் பிரேவிஸ் 31 (13), சூர்யகுமார் யாதவ் 37 (27) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர்.  இறுதியில் திலக் வர்மா 26 (26), பொல்லார்ட் 25 (14) இருவரும் பெரிய ஸ்கோர் அ டிக்கவில்லை. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 181-9 ரன்கள் மட்டும் சேர்த்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

 

Leave a Reply

Your email address will not be published.