இது அந்த கார்த்திக் இல்ல.. 37 வயதில் ருத்ரதாண்டவம் ஆடும் கார்த்திக் 2.O | கோலியே அப்செட் ஆகிட்டாரு.. டி20 வேல்ட் கப் அணியில் இடம் நிச்சயம் !

Cricket

ஆரம்பத்தில் தடுமாறிக் கொண்டிருந்த ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் மீண்டடுத்து இறுதியில் வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார் தினேஷ் கார்த்திக். 2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் 27ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கெபிடல்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் வழக்கம்போல ஓபனர்கள் டூ பிளஸி 8 (11), அனுஜ் ராவத் 0 (1) ஆகியோர் படுமோசமாக சொதப்பினார்கள். இதனைத் தொடர்ந்து கோலியும் 12 (14) ரன் அவுட் ஆனதால், மீண்டும் மிடில் வரிசையை நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு ஆர்சிபி தள்ளப்பட்டது.

அதேபோல் மேக்ஸ்வெலும் சிறப்பாக விளையாடி ரன் மழை பொழிந்து வந்தார். இறுதியில் 34 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பிரபுதேசாயும் 6 (7) பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்து ஷாபஸ் அகமது, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது முஷ்தபிசுர் ரகுமான் வீசிய 18ஆவது ஓவரில் தினஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்களை விளாசி 28 ரன்களை குவித்து, 27 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இதனால், ஆர்சிபியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 189-5 ரன்களை குவித்தது. தினேஷ் கார்த்திக் 66 (34), ஷாபஸ் அகமது 32 (21) ஆகியோர் கடைசிவரை களத்தில் இருந்தார்கள்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய டெல்லி அணியில் டேவிட் வார்னர் 66 (38), ரிஷப் பந்த் 34 (17) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தனர். இதனால், டெல்லி அணி 20 ஓவர்களில் 173-7 ரன்கள் மட்டும் சேர்த்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Leave a Reply

Your email address will not be published.