‘எனக்கு ஒரு பெரிய குறிக்கோள் உள்ளது.’ – புதிய பினிஷராக உருவெடுத்துள்ள கார்த்திக்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 28 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 66 ஓட்டங்களை குவித்து தனது அதிரடியை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டினார். இந்த போட்டியில் பெங்கள10ர் அணி வெற்றி பெற்ற நிலையில் ஆட்ட நாயகன் விருது தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட பின்னர் அவர் பேசியதாவது,

‘எனக்கு ஒரு பெரிய குறிக்கோள் உள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். இது எனது பயணத்தின் ஒரு பகுதி. நான் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்.’ என தெரிவித்தார்.

இந்நிலையில் பெங்கள10ர் அணியின் தலைவர் பாப் டு பிளெசிஸ் தினேஷ் கார்த்திக்கை பாராட்டி உள்ளார். தற்போது அவர் விளையாடும் விதம் இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக இருக்கிறது. அவர் மிகவும் தெளிவாகவும், அமைதியுடனும் இருக்கிறார். என குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.