‘இந்தியாவுக்காக 2022 டி20 வேல்ட் கப்பை வென்று கொடுப்பதே எனது இலக்கு’ – கோலியிடம் கூறிய கார்த்திக். ஒரு தமிழனின் ஆசையை பார்த்திங்களா.. உன் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் 15வது ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 66 ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 55 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் 66 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 34 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்றவர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறினர்.

ரிஷப் பண்ட் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டை இழந்ததாலும், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக்கை, விராட் கோலி போட்டி முடிந்த பிறகு பேட்டி எடுத்தார். இதில் விராட் கோலியின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக டி.20 உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், ‘இந்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே எனது தற்போதைய இலக்கு. இந்திய அணியில் இடம்பிடித்து, இந்திய அணிக்காக டி.20 உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என காத்துள்ளேன். இது சாதரணமாக நடந்துவிடாது என்பது தெரியும், ஆனால் ஒவ்வொரு நாளும் இதற்காக தீவிரமாக முயற்சித்து வருகிறேன்.

இந்திய அணி 2013ம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி., கோப்பைகளை வெல்லவில்லை என்பது தெரியும், எனவே எதிர்வரும் டி.20 உலகக்கோப்பையில் எனது பங்களிப்பின் மூலம் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.