‘நான் விளையாடும் போது கோலி விளையாடியிருந்தால் இவ்வளவு ரன்கள் எடுத்திருக்க மாட்டார். அவரால் 50 சதங்கள் வரை அ டித்திருக்க முடியாது’ – அக்தார் ஓபன் டாக்

Cricket

தற்கால கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் முன்னாள் தலைவராக விராட் கோலி தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக திகழ்கிறார். கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். விராட் கோலிக்கு எமனாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர். இவர் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் போன்ற மாபெரும் பேட்டிங் ஜாம்பவான்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.

இந்த நிலையில் இவர் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து பேசியுள்ளர். விராட் கோலி குறித்து அக்தர் கூறுகையில்,’ விராட் கோலி ஒரு நல்ல மனிதர் மற்றும் சிறந்த கிரிக்கெட் வீரர், ஆனால் நான் விராட் கோலிக்கு எதிராக விளையாடியிருந்தால், அவர் இவ்வளவு ரன்களை எடுத்திருக்க மாட்டார். ஆனால் அவர் எனக்கு எதிராக எத்தனை ரன்கள் எடுத்திருந்தாலும் அது அற்புதமானதாக இருக்கும், மேலும் அந்த ரன்களுக்காக அவர் கடுமையாக போராடியிருப்பார்.

அவரால் 50 சதங்கள் வரை அ டித்திருக்க முடியாது. அதிகபட்சம் 20 அல்லது 25 சதங்கள் அ டித்து இருக்கலாம். ஆனால் அவை சிறந்த சதங்களாக இருந்திருக்கும். விராட் கோலின் சிறந்ததை நான் வெளிக்கொண்டு வந்திருப்பேன் ‘ எனத் தெரிவித்துள்ளார். 2010 இல், தம்புல்லாவில், ஆசியக் கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் அக்தர் மற்றும் கோலி பங்கேற்று இருந்தனர். இருப்பினும், கோலி தொடக்கத்திலே ஆட்டமிழந்தார். இதனால் அவர் அக்தரை எதிர்கொள்ளவில்லை. அதன் பிறகு இருவரும் ஒரே போட்டியில் விளையாடியது இல்லை.

Leave a Reply

Your email address will not be published.