என்ன மன்னிச்சிருங்க.. குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த செயலால் ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு பல லட்சம் இழப்பு

Cricket

2022 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் புதிதாக களமிறங்கிய கலக்கிவரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த செயலால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 24வது லீக் போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் 52 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்ட்யா 87 ரன்களை விளாசினார். குஜராத் அணியின் இது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில் அந்த போட்டியில் அவர் செய்த ரன் அவுட்டால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு ரூ. 40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை பாண்டியா ரன் அவுட் செய்தார். அப்போது அவர் பந்தை எறிந்த வேகத்தில் ஒரு ஸ்டம்ப் உடைந்தது. இதனால் வேறு ஸ்டம்ப் மாற்றப்பட்டு பின்னர் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா உடைத்த ஸ்டம்பின் மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி ஒரு செட் எல்இடி டெக்னாலஜி ஸ்டம்புகளின் விலை சுமார் 35 முதல் 40 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. ஹைடெக் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த ஸ்டம்புகள் அவ்வளவு எளிதாக உடைவதில்லை. இருப்பினும் ஹர்திக் வீசிய துரோ மூலம் ஸ்டம்ப் உடைந்ததால் ஐ பி எல் அமைப்புக்கு பல லட்சம் செலவு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.