‘இந்த ஒரு நோக்கத்திற்காக தான் ஜோர்டானுக்கு ஓவர் வீச வழங்கினேன்’ – கேப்டன்ஷியை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த ராக்கட் ஜடேஜா

Cricket

நடப்பு ஐ.பி.எல் தொடரில் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைடன்ஸ் அணியிடம் இறுதி ஓவரில் பரிதாபமாக தோற்றுப் போனது. குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 169-5 ரன்களை சேர்த்தது. குறித்த இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் அணியில் சுப்மன் கில் 0 (1), விஜய் சங்கர் 0 (2) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அபினவ் மனோகர் 12 (12), ராகுல் தேவத்தியா 6 (14) இருவரும் ஆட்டமிழந்ததால், வெற்றி வாய்ப்பு சிஎஸ்கேவுக்கு பிரகாசமாக இருந்தது. இந்நிலையில் டேவிட் மில்லர், ரஷித் கான் இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள்.

இதனால் குஜராத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 170-7 ரன்கள் சேர்த்து, 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மில்லர் 94 (51), ரஷித் கான் 40 (21) இருவரும் பெரிய ஸ்கோர் அடித்திருந்தார்கள். குஜராத் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் வெற்றிபெற வேண்டிய போட்டியில் தோற்றது குறித்து ரவீந்திர ஜடேஜா பேட்டி கொடுத்துள்ளார். அதில், ‘ஆட்டத்தை சிறப்பாகத்தான் துவங்கினோம். முதல் 6 ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர்.

கடந்த 5 ஓவர்களின்போது நாங்கள் எங்கள் திட்டத்தை சரியாக வெளிப்படுத்தவில்லை. கிறிஸ் ஜோர்டன் நன்றாக யார்க்கர்களை வீசக் கூடியவர். இப்போட்டியிலும் வீசுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவரால் முடியவில்லை. இதுதான் டி20 கிரிக்கெட். என்ன நடக்கும் என்பதை கணிக்கவே முடியாது’ எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.