‘உறுதியாக சொல்ரன். இந்த வருஷம் இந்த டீம் தான் சம்பியன் பட்டத்தை கைப்பற்றும்’ – ரவி சாஸ்திரி வாய்ப்பேச்சு

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணி என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் சம்பியன் அணிகளாக திகழ்ந்து வரும் சென்னை சுப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகிறது. மறுபுறம் புதிய அணிகளாக லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, வெற்றிகளை குவித்து முதல் இரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன.

அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறது. இதனால், இந்த வருடம் புதிய அணி ஒன்றுதான் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இதே கருத்தைத்தான் கூறியுள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த ரவி சாஸ்திரி, ‘இந்த சீசனில் புதிய சாம்பியன் வரப்போகிறது என நான் உறுதியாக நம்புகிறேன். அதிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இம்முறை கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

அந்த அணி உடனே தனது தவறுகளை திருத்திக்கொண்டு, வெற்றிநடை போட்டி வருகிறது. இதனால், கோப்பையே வெல்லாமல் இருந்த ஆர்சிபி இம்முறை அந்த மோசமான ரெக்கார்ட்டை தகர்த்தெறிய வாய்ப்புள்ளது’ எனக் கூறினார். மேலும் பேசிய ரவி சாஸ்திரி, ‘விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியப் பிறகு தனது வேலைகளை சிறப்பாக செய்து வருகிறார். அதேபோல் கிளென் மேக்ஸ்வெல் எந்த அளவுக்கு அதிரடி காட்டுவார் என்பது நமக்கு தெரியும். ஸ்பின்னர்களை அசால்ட்டாக டீல் செய்து வருவது கூடுதல் பலம். கேப்டன் டூ பிளஸியும் அதிரடியாக செயல்படக் கூடியவர்தான். அந்த அணியில் குறைகளை கண்டுபிடிப்பதே கஷ்டம்தான்’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.