உனக்கு நான் தான் ராஜா… லெஜெண்ட் கோலியை கோல்டன் டக்-அவுட் செய்து சாதனை படைத்த இலங்கை வீரர் சமீர

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை, நவி மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது. 25-வது நாளான நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- பாப் டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. குறித்த போட்டி ஆரம்பமாக முன்னர் இரு அணிகளும் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருந்தன. நிகர ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 3- வது இடத்திலும், பெங்களூரூ 4-வது இடத்திலும் இருந்தன.

இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரூ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அஞ்சு ராவத் சமீரவின் பந்தில் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய முன்னாள் கேப்டன் கோலி ஓட்டம் எதுவும் இன்றி தனது முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இதன் விராட் கோலியை 5 வருடங்களின் பின்னர் கோல்டன் டக்அவுட் செய்த முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளராக லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணியில் விளையாடும் துஸ்மந்த சமீர பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.