மும்பை இந்தியன்ஸ் ஜாம்பவான் மாலிங்கவின் சாதனையை காலி பண்ண ரெடியான புவனேஸ்வர் குமார்

Cricket

பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டினார். அத்துடன், ஒட்டுமொத்த வேகப்பந்துவீச்சாளர்களில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிவரும் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ (174), மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க (170) ஆகியோரைத் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் புவனேஸ்வர் குமார் பெற்றார்.

இதேபோல் அமித் மிஷ்ரா (166), பியூஷ் சாவ்லா (157), யுஸ்வேந்திர சஹால் (151), ஹர்பஜன் சிங் (150) ஆகியோரும் 150 விக்கெட் என்ற மைல்கல்லை கடந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.