‘ரெய்னா எல்லாம் கிடையாது.. இவர் தான் உண்மையான மிஸ்டர் ஐ.பி.எல். ஆனா அவருக்கு உரிய அந்தஸ்து கிடைப்பதில்லை’ – ஸ்வான் டாக்

Cricket

இந்தியன் ப்ரீமியர் லீக் வரலாற்றில் சுரேஷ் ரெய்னா, விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், எம்.எஸ். டோனி, டேவிட் வார்னர், டி வில்லியர்ஸ் ஆகிய வீரர்கள் அபாரமாக விளையாடி ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்கள் என பெயர் எடுத்துள்ளனர். இன்றைக்கு சீண்ட ஆள் இல்லாமல் இருக்கும் ரெய்னா தான் ஒரு காலத்தில் மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்பட்டார். சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோஹித், எம்.எஸ். தோனி, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர் ஆகிய அனைவருமே ஐபிஎல் லின் சிறந்த வீரர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

ஆனால் ஐபிஎல்லில் மிகச்சிறப்பாக விளையாடி, 5989 ரன்களுடன் ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்து 2ம் இடத்தில் இருக்கும் ஷிகர் தவானுக்குத்தான் அவருக்கு தகுதியான அளவிற்கான அங்கீகாரமோ பெயரோ கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், கிறிஸ் கெய்ல் ஆகிய பெரிய வீரர்களை விட அதிகமான ரன்களை குவித்தும் கூட, குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் தவான் ஆவார்.

இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடும் தவான், இந்த சீசனிலும் அபாரமாக பேட்டிங் ஆடிவரும் நிலையில், அவர் தான், தன்னை பொறுத்தமட்டில் மிஸ்டர்.ஐபிஎல் என்று இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் க்ரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய க்ரேம் ஸ்வான், என்னை பொறுத்தமட்டில் மிஸ்டர்.ஐபிஎல் என்றால் அது தவான் தான். இந்த சீசனிலும் அபாரமாக ஆடிவருகிறார். அவர் பேட்டிங் ஆடும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ஆவலுடன் பார்ப்பேன்.

ஷிகர் தவான் களத்திற்கு வந்ததும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்ஸர் அ டிக்கிறார் என்றால், அவர் செம ஃபார்மில் இருக்கிறார் என்றும் அன்றைய தினம் அவருடையது என்றும் அர்த்தம். ஸ்கொயர், ஸ்டிரைட், லெக் திசை என அனைத்து திசைகளிலும் பலமானவர் தவான். அருமையான வீரர் என்று க்ரேம் ஸ்வான் புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.