சொந்த நாட்டுக்காக விளையாடும் போது ச ண்டை போட்டு எதிரிகளாகிவிட்டு ஐ.பி.எல் மூலம் மீண்டும் நண்பர்களான டாப் 5 நண்பர்கள் லிஸ்ட்

Cricket

சர்வதேச கிரிக்கெட்டில் தங்கள் நாட்டுக்காக விளையாடும்போது ச ண்டை போட்டுக் கொண்ட வீரர்கள் நாளடைவில் காலத்தின் சுழற்சியால் நண்பர்களாக மாறிய கதைகளும் உள்ளது. ஏதோ ஒரு காரணத்துக்காக ச ண்டை போட்டுக் கொண்ட அந்த வீரர்களை நண்பர்களாக மாற்றி ஒன்றாக ஒரே அணியில் கட்டிப்பிடித்து வெற்றியை கொண்டாடும் அளவுக்கு மாற்றங்களை நிகழ்த்தும் வல்லமை ஐ.பி.எல் தொடருக்கு உள்ளது. அந்த வகையில் எதிரிகளாக இருந்து ஒரே அணியில் விளையாடிய வீரர்கள் தொடர்பில் பார்க்கலாம்.

  1. ஹர்பஜன் – சைமன்ஸ்

2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு சைமண்ட்சை குரங்கு என இந்திய வீரர் ஹர்பஜன் சிங் திட்டியதாக எழுப்பப்பட்ட புகார் உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதன் காரணமாக இந்திய வீரர் ஹர்பஜனுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு பி.சி.சி.ஐ எதிர்ப்பு தெரிவித்ததால் அது விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் காரணமாக எலியும், பூனையுமாக மாறிய அந்த ஜோடி ஐ.பி.எல் தொடரில் மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகளுக்காக மீண்டும் எதிரிகளாக விளையாடியது.

அந்த நிலையில் 2011ஆம் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் ஆண்ட்ரு சைமண்ட்சை வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பின் நாட்டுக்காக விளையாடியபோது போட்டுக்கொண்ட சண்டையை மறந்த இந்த ஜோடி ஒன்றாக ஒரே அணியில் விளையாடியதைப் பார்க்க முடியும் என ரசிகர்கள் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

  1.           ஹர்பஜன் – பொண்டிங்:

அதே மங்கிகேட் சர்ச்சையின் போது தனது அணி வீரர் சைமன்சை திட்டிய ஹர்பஜன் சிங்கை தடை செய்ய வேண்டும் என்று அவுஸ்திரேலிய தலைவராக இருந்த ரிக்கி பொண்டிங் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அத்துடன் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது விக்கெட்டை அதிகமுறை எடுத்த சாதனை படைத்த ஹர்பஜன் சிங்கை நாட்டுக்காக விளையாடும் போதெல்லாம் அவர் ஒரு எதிரியாக பாவித்து வந்தார். அந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு அதேபோல மும்பை அணியில் இவர்கள் ஒன்றாக விளையாடுவார்கள் என்று பல ரசிகர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  அந்த தருணத்தை சாத்தியமாக்கி காட்டிய ஐ.பி.எல் ஒரு போட்டியில் ஹர்பஜன் வீசிய பந்தில் கிடைத்த கேட்ச்சை ஸ்லிப் பகுதியில் சுப்பர் மேனை போல ரிக்கி பொண்டிங் தாவிப் பிடித்ததை பார்த்த ஹர்பஜன் அவரை கட்டிப்பிடித்து பழைய பகையை மறந்து நண்பர்களாக மாறியது என்றும் மறக்க முடியாது.

  1.           வார்னர் – பேர்ஸ்டோ

அனல் பறக்கும் ஆஷஸ் தொடரில் தங்களது நாட்டுக்காக விளையாடிய போது அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஒரு கட்டத்தில் கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்துகொண்டு எதிரிகளாக இருந்தனர். ஆனால் 2019ஆம் ஆண்டு இவர்களை ஹைதராபாத் அணியில் இணைத்த ஐ.பி.எல் ஒரே அணியில் விளையாட வைத்தது. அதன் காரணமாக பழையதை மறந்த இந்த ஜோடி அதுவும் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கி எதிரணிகளைப் பந்தாடி வெற்றிகளைக் குவித்தது. கடந்த 2021 வரை ஒன்றாக விளையாடிய இந்த ஜோடி ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவு செய்த ஓப்பனிங் ஜோடி (185 ஓட்டங்கள்) என்ற சாதனையும் படைத்துள்ளது.

  1.           அஷ்வின் – பட்லர்

இந்தியாவின் அஷ்வின், இங்கிலாந்தின் பட்லர் ஆகியோர் ஐ.பி.எல் தொடரில் சண்டை போட்டு அதே ஐ.பி.எல் தொடரால் தற்போது இணைந்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு அஷ்வின் ராஜஸ்தானுக்கு விளையாடிய பட்லரை மன்கட் செய்ததை பற்றி பெரிதாக கூற வேண்டியதில்லை. அதனால் எதிரும் புதிருமாக இருந்த இவர்கள் அவர்களே எதிர்பாராத வண்ணம் இம்முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் சங்கடமான நிலை ஏற்பட்டது. இருப்பினும் பழையதை மனதில் வைத்துக் கொள்ளாத இந்த ஜோடி தற்போது ராஜஸ்தானுகாக ஒன்றாக சிரித்த முகத்துடன் விளையாடுவது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

  1.           பாண்டியா – ஹூடா

கடந்த 2021இல் உள்ள10ர் கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக விளையாட இருந்தபோது அதன் தலைவர் க்ருனால் பாண்டியா தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக அதே அணியைச் சேர்ந்த இளம் வீரர் தீபக் ஹூடா குற்றம் சாட்டியது ரசிகர்களை அதிர வைத்தது. அதன்பின் பரோடா அணியில் தடை செய்யப்பட்ட ஹூடா ராஜஸ்தானுக்கு குடி பெயர்ந்து இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்தார். இந்நிலையில் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ அணி நிர்வாகம் ஏலத்தின் போது அவர்களை ஜோடியாக வாங்கியது. அதன்பின் இந்தாண்டு ஐ.பி.எல் தொடரின் போது இவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு முதல் போட்டியிலேயே ஒரு விக்கெட் விழுந்தபோது கட்டிப்பிடித்து கொண்டாடிய இந்த ஜோடி ஆச்சரியத்தை கொடுத்து தற்போது ஒன்றாக அண்ணன் தம்பியை போல விளையாடிவருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.