‘ஐபிஎல் தொடரில் அம்பையரிங் மோசமாக உள்ளது. தகுதியானவர்களை நியமியுங்கள்’ – ஆத்திரமடைந்த தமிழக வீரர்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் நடைபெற்றுவரும் நிலையில் குறித்த தொடரில் அம்பையரிங் மோசமாக உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். ரோயல் செலஞ்சர்ஸ் பெங்கள10ர் – லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த போட்டியில் முக்கியமான தருணத்தில் லக்னோ அணியின் ஸ்டாய்னிஸ் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் அட்டமிழக்கும் முன் முந்தைய பந்தை ஹேசில்வுட் வைட்டாக வீசினார். ஆனால் களநடுவர் அதற்கு வைட் கொடுக்கவில்லை. பேட்ஸ்மேன் ஸ்டோய்னிஸ் நகர்ந்துவிட்டதாக கூறி சரியான பந்து என அறிவித்தார்.

அதுமட்டுமின்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான ஆட்டத்தின் போது, இன்னிங்ஸின் முதல் இரண்டு பந்துகளில் தொடக்க ஆட்டக்காரர் அஜிங்க்யா ரஹானேவுக்கு தவறான முடிவு வழங்கப்பட்டது. பின்னர் அவர் நடுவர் முடிவை மேல்முறையீடு செய்து தப்பித்தார். அதேபோல் மற்றொரு போட்டியில் விராட் கோலி சர்ச்சைக்குரிய வகையில் எல்பிடபிள்யூ ஆனார். இதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் ‘வைட்’ முடிவுகளில் நடுவர்கள் சரியான முடிவை வழங்கவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அம்பையரிங் மோசமாக உள்ளதாக முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கிரிக்கெட் போட்டிகளில் சிறிய தவறான முடிவுகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த ஐபிஎல்-லில் அம்பையரிங் மிக மோசமாக உள்ளது, இனியாவது விழித்து கொள்ளுங்கள். நடுவராக தகுதியானவர்களை நியமியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.