1.90 கோடி வீரருக்கு சர்வதேச போட்டியில் விளையாடாத இலங்கை வீரர்… தண்ணீர் போத்தல் தூக்கித் திரிய பக்கா பிளான் போட்ட சி.எஸ்.கே நிர்வாகம் – முழு செய்தி உள்ளே

Cricket

1.90 கோடி வீரருக்கு சர்வதேச போட்டியில் விளையாடாத இலங்கை வீரர்… தண்ணீர் போத்தல் தூக்கித் திரிய பக்கா பிளான் போட்ட சி.எஸ்.கே நிர்வாகம் – முழு செய்தி உள்ளே

சென்னை அணியின் தண்ணீர் போத்தல் துக்கவுள்ள இலங்கை வீரர்… 2022ஆம் ஆண்டுக்கான 15ஆவது ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 32 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு போட்டிகள் மிகவும் விறுவிறுப்பான அமைந்தது. இதில் நேற்று முன்தினம் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டி மாத்திரம் தான் விறுவிறுப்பு இல்லாத போட்டியாக அமைந்திருந்தது. இந்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே கா யம் காரணமாக இந்த சீசனில் இனி வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

2022 ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ரூ 1.90 கோடிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. இவருக்கு மாற்று வீரராக 19 வயதுடையோருக்கான உலக கோப்பையில் விளையாடிய இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீசா பதிராணா சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இந்திய மதிப்பில் 20 இலட்சம் ரூபா விளையில் வாங்கப்பட்டுள்ளார். இதுவரையில் இலங்கை அணியில் ஒரு போட்டியிலும் விளையாடாத அவர் ஒரு நோக்கத்திற்காக அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதாவது சீனியர் வீரர்களை வைத்துக்கொண்டு அவர்களை தண்ணீர் போத்தல் தூக்க சொல்லுவது அவ்வளவு நல்லதாக இருக்காது. இதனாலேயே சர்வதேச போட்டியில் விளையாடாத ஒரு வீரரை இலகுவாக தண்ணீர் போத்தல் தூக்க வைக்கலாம் என்ற அடிப்படையில் இலங்கை வீரர் மதீசா பத்திரண சென்னை அணியில் இடம்பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.