தலைவர் இருக்கான் என்றத மறந்து சின்ன பையனுங்க விக்கெட் வீழ்த்தி என்னமாடா ஆட்டம் போட்டிங்க… டேய் ரோஹிட் நீ ரொம்ப பாவம்டா.. ஓவரா அசிங்கப்படாம கேப்டன்ஷிய விட்டுட்டு ஓடிப்போயிரு

Cricket

டோனி ஆடுகளத்தில் இருந்தும் விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடிய மும்பை வீரர்கள்…

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை போன்று விறுவிறுப்பாக அமைந்த மும்பை இந்தியன்ஸ் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி த்ரில் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் பெரிய அணிகளாக பார்க்கப்படும் ஆர்.சி.பி மற்றும் மும்பை அணிகளை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. ஐபிஎல் 15ஆவது சீசனின் 33ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன் படி முதலில் ஆடிய மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் 42-3 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 32 (21), க்ரிதிக் ஷோகீன் 24 (25) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அ டிக்கவில்லை. கெய்ரன் பொல்லார்ட் 14 (9), டேனியல் சாம்ஸ் 5 (3) போன்றவர்களும் ஆட்டமிழந்தார்கள். இருப்பினும், மறுமுனையில் திலக் வர்மா நிதானமாக விளையாடி 51 (43) ரன்களை அ டித்தார் அடுத்து உதான் கட்டும் 9 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்ததால், இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 155-7 ரன்களை சேர்த்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஓபனர் ருதுராஜ் கோல்டன் டக் ஆனார். அடுத்து ராபின் உத்தப்பா 30 (25), மிட்செல் சாண்ட்னர் 11 (9), ஷிவம் துபே 13 (14), ரவீந்திர ஜடேஜா 3 (8) ஆகியோர் பெரிய ஸ்கோர் அ டிக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடுவும் 40 (35) திடீரென்று அவுட் ஆனார். அடுத்து அதிரடியாக விளையாடி வந்த பிரிடோரியஸும் 22 (14) கடைசி ஓவரின் முதல் பந்தில் நடையைக் கட்டினார். இறுதியில் உனாத்கட் ஓவரில் 5 பந்துகளில் 17 ரன்கள் அ டிக்க வேண்டும் என்ற நிலை வந்தது.

அப்போது தோனி ஒரு சிக்ஸர் அ டித்ததால் 3 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து தோனி பவுண்டரி, இரண்டு ரன்கள், பவுண்டரி அ டித்து அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 156-7 ரன்கள் அடித்து, 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சி.எஸ்.கே அணியின் இந்த வெற்றியை சென்னை ரசிகர்கள் வெ றித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.