என்னத்த சொல்ல… ‘டோனி களத்தில் இருந்தால் என்ன நடக்கும் என்பது எங்களுக்கு நன்று தெரியும்’ – ரோஹிட் டாக்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை போன்று விறுவிறுப்பாக அமைந்த மும்பை இந்தியன்ஸ் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி த்ரில் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் பெரிய அணிகளாக பார்க்கப்படும் ஆர்.சி.பி மற்றும் மும்பை அணிகளை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. ஐபிஎல் 15ஆவது சீசனின் 33ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன் படி முதலில் ஆடிய மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் 42-3 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து மறுமுனையில் திலக் வர்மா நிதானமாக விளையாடி 51 (43) ரன்களை அ டித்தார் அடுத்து உதான் கட்டும் 9 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்ததால், இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 155-7 ரன்களை சேர்த்தது. இலக்கை துரத்திக் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஓபனர் ருதுராஜ் கோல்டன் டக் ஆனார். அடுத்து ராபின் உத்தப்பா, மிட்செல் சாண்ட்னர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஆகியோர் பெரிய ஸ்கோர் அ டிக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடுவும் திடீரென்று அவுட் ஆனார்.

அடுத்து அதிரடியாக விளையாடி வந்த பிரிடோரியஸும் 22 (14) கடைசி ஓவரின் முதல் பந்தில் நடையைக் கட்டினார். இறுதியில் உனாத்கட் ஓவரில் 5 பந்துகளில் 17 ரன்கள் அ டிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அப்போது தோனி ஒரு சிக்ஸர் அ டித்ததால் 3 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து தோனி பவுண்டரி, இரண்டு ரன்கள், பவுண்டரி அ டித்து அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 156-7 ரன்கள் அ டித்து, 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சி.எஸ்.கே அணியின் இந்த வெற்றியை சென்னை ரசிகர்கள் வெ றித்தனமாக கொண்டாடி வருகின்றனர். ஐ.பி.எல் வரலாற்றில் 5 தடவைகள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்றில் முதன்முறையாக முதல் ஏழு போட்டிகளையும் தோற்ற முதல் அணி என்கிற சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், சென்னை அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, தோனி மற்றும் ப்ரெடோரியஸ் இருவரும் வெற்றியை தங்களிடம் இருந்து பறித்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், ‘வெற்றிக்காக கடுமையாக போராடினோம். பேட்டிங்கில் மிக மோசமாக சொதப்பிய போதிலும், இந்த போட்டியை இறுதி வரை எடுத்து வந்ததில் மகிழ்ச்சி தான், இதற்கு எங்கள் பந்துவீச்சாளர்கள் தான் முக்கிய காரணம். தோனி களத்தில் இருந்து என்ன நடக்கும் என்பது எங்களுக்கு நன்று தெரியும், எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தோனி கூலாக சமாளித்துவிடுவார், இந்த போட்டியில் அதை செய்து வெற்றியை எங்களிடம் இருந்து பறித்துவிட்டார். எங்கள் தோல்விக்கு இது தான் காரணம் என பெரிதாக எதையும் சுட்டிக்காட்ட முடியாது.

பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டோம், விரைவாக விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தால் அது நிச்சயம் அணிக்கு பெரும் பின்னடைவை மட்டும் தான் கொடுக்கும். பந்துவீச்சாளர்களை குறை சொல்ல முடியாது, மிக குறைந்த இலக்கு தான் என்ற போதிலும், எதிரணி பேட்ஸ்மேன்களை எங்கள் பந்துவீச்சாளர்கள் நெருக்கடிக்குள் வைத்து கொண்டனர், ஆனால் ப்ரெடோரியஸ் மற்றும் தோனி போட்டியின் முடிவை மாற்றிவிட்டார்கள்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.