கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற மிகவும் பிரபலமான லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இதுவரையில் 14 தொடர்கள் நிறைவுபெற்ற நிலையில் 15ஆவது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடம் நடைபெறுகின்ற தொடர்களின் போதும் ஐ.பி.எல் சூ தாட்டம் நடைபெறுகிறது என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும். இந்நிலையில் 15ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 26ஆம் திகதி முதல் இந்தியாவில் நடைபெற்றுவரும் நிலையில் ஒடிசாவின் – சுந்தர்கர் மாவட்டத்தில் ஐ.பி.எல் சூதா ட்ட மோ சடியில் ஈடுபட்ட 9 பேர் பொ லிஸாரினால் கை து செய்யப்பட்டனர்.
கை தானவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 19 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் வீடொன்றை வாடகைக்கு பெற்று ஐ.பி.எல் சூதா ட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அவர்களிடமிருந்து தொலைபேசிகள், மடிக்கணினிகள் என்பனவற்றையும் பொ லிஸார் கைப்பற்றினர்.