மும்பைக்கு வாய்ப்பு உள்ளது.. கிரிக்கெட் பத்தி ஒழுங்கா தெரியாதவன் தான் மும்பை ப்ளேஓப் போகாதுன்னு உருட்டிட்டு திரியுரான். கணக்கு விபரம் இதோ !

Cricket

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 7 போட்டிகளிலும் தோல்வியடைந்தாலும் இன்னும் ப்ளேஓப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது கிடையாது. ஆனால் இந்த முறை ஒவ்வொரு போட்டியிலும் மறக்க முடியாத தோல்வியைச் சந்தித்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் இதுபோன்று மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்த 5 ஆட்டங்களில் தோல்வி அடைந்து அதன்பின் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றதே என்று கேட்கலாம். ஆனால், இந்த தொடரில் கடைபிடிக்கப்பட்ட முறை வேறு இதுவேறு. இந்த சீசனில் ரவுண்ட் ராபின் முறை கடைபிடிக்கப்படுகிறது.

ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 14 புள்ளிகள் எடுத்திருக்க வேண்டும். 16 புள்ளிகள் எடுத்திருந்தால், நிகர ரன்ரேட் நன்கு இருந்தால் உறுதியாகிவிடும். ஒருவேளை 14 புள்ளிகளுடன் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் இருந்தால், ரன்ரேட் அடிப்படையில் தேர்வாகும். அந்தவகையில் ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். மும்பை இந்தியன்ஸ் இதுவரை 7 ஆட்டங்களில் அதாவது பாதி ஆட்டங்களில் விளையாடி தோல்வி அடைந்துவிட்டது.

அடுத்ததாக 7 ஆட்டங்களில் விளையாட வேண்டும், கண்டிப்பாக அனைத்து ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். அவ்வாறு வென்றால்தான் 14 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் மற்ற அணிகளுக்கு நெருக்கடி கொடுக்க இயலும். ஆதலால், அடுத்துவரும் ஒவ்வொரு போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அதிகமான ரன்ரேட்டில் வெல்ல வேண்டும். எதிரணியை குறைந்த ஓவரில் சுருட்டி அதை குறைந்த ஓவரில் சேஸிங் செய்ய வேண்டும. அல்லது எதிரணி அடித்த ஸ்கோரை விக்கெட்டுகளை குறைவாக இழந்து, குறைந்த ஓவரில் சேஸ் செய்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன்ரேட் உயரும்.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒருவேளை 14 புள்ளிகள் எடுத்தாலும் ப்ளேஆஃப் செல்லுமா என்றாலும் அது சந்தேகம்தான். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி மைனஸ் -0.892 ரன்ரேட்டில் இருக்கிறது. மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி நிகர ரன்ரேட் அடிப்படையில்தான் மும்பை இந்தியன்ஸ் வாய்ப்பு உறுதியாகும்.

Leave a Reply

Your email address will not be published.