2022ஆம் ஆண்டுக்கான 15ஆவது ஐ.பி.எல் தொடர் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், சஞ்சு சாம்சனிடம் தமிழில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் போது தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, அஸ்வின், உள்ளிட்ட தமிழக வீரர்கள் அவ்வப்போது களத்தில் தமிழில் பேசுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் அஸ்வின் விக்கெட் கீப்பர் சாம்சனிடம் தமிழில் பேசியுள்ளார். சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் கூட தமிழ் நன்கு அறிந்தவர். இந்த போட்டியில் டெல்லி அணியின் பேட்டிங்கின் போது 6-வது ஓவரை வீசிய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் முதல் பந்தில் ஷர்பாரஸ் கான் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்காக வியூகம் அமைத்த அஸ்வின், விக்கெட் கீப்பர் சாம்சனிடம் தமிழில் பேசினார்.
இறங்குனான்னா இந்த பக்கமும் அந்த பக்கமும் பாத்துக்கோ. ஃபர்ஸ்ட் பாலே கூட எறங்குவான் என கூறினார். அதாவது, ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட பார்க்கும் ரிஷப் பண்ட்டை ஸ்டம்பிங் செய்வதில் கவனமாக இருக்குமாறு கூறினார் அஸ்வின்.
Ashwin and Sanju Samson Tamil conversation@ashwinravi99 @IamSanjuSamson @SriniMaama16 😂😂😂 pic.twitter.com/xeiEvn7ht4
— Bala Mahesh (@mahesh2me) April 22, 2022