‘பட்லரை போன்று ஏன் உங்களால் சதம் அ டிக்க முடியவில்லை அப்பா?’ – வோர்னரிடம் கேள்வியெழுப்பும் அவரது குழந்தைகள்

Cricket

‘பட்லரை போன்று ஏன் உங்களால் சதம் அ டிக்க முடியவில்லை அப்பா?’ – வோர்னரிடம் கேள்வியெழுப்பும் அவரது குழந்தைகள்

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் கடந்த புதன்கிழமை இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி பந்தாடியது. இந்த ஆட்டத்தில் 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை அதிரடியாக குவித்த டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் சுவாரஸ்யமான ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.  அவர் தெரிவிக்கையில், ‘பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை அருமையாக செய்தார்கள். இதனால் எங்களது வேலை எளிதாகிவிட்டது. பந்து வீச்சாளர்களுக்கே எல்லா பெருமையும் சாரும். ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் அணி) போல் என்னால் ஏன் சதம் அடிக்க முடியவில்லை? என்பதை அறிந்து கொள்ள எனது குழந்தைகள் விரும்புகிறார்கள்.

ஆனால் இது எளிதான விடயமல்ல. தற்போதைய நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 60 ஓட்டங்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது.’ ‘ஜோஸ் பட்லர் சதம் அ டித்த ஆட்டங்களை எனது 3 மகள்களும் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். அதன் பிறகு அவரை போல் மைதானத்துக்கு வெளியே செல்லும் வகையில் மெகா சிக்சர் அடிக்காதது ஏன்? என்று என்னிடம் தொடர்ந்து கேள்வி கணைகளை தொடுக்கிறார்கள். கிரிக்கெட் ஆட்டத்தை எனது மகள்கள் பார்ப்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது’ என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published.