நடப்பு ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 42ஆவது 42ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய லக்னோ அணியில் ஓபனர் கே.எல். ராகுல் 6 (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டி காக், தீபக் ஹூடா இருவரும் பார்டனர்ஷிப் அமைத்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள்.
அப்போது சந்தீப் ஷர்மா வீசிய 12.4ஆவது ஓவரில் டி காக் அடித்த பந்து கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவின் கைகளுக்குள் சென்றது. பௌலர், கீப்பர் இருவரும் கடுமையாக முறையிட்டனர். இருப்பினும், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால், டி காக் அவுட் என கூறி திடீரென்று நடையைக் கட்டினார். இதற்கு மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்ட ஆரம்பித்தார்கள். டி காக் 46 (37) ரன்கள் சேர்த்திருந்தார்.
குயிண்டன் டி காக் செயல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அன்று இதேபோன்று தான் இலங்கை அணியின் குமார் சங்கக்கார அம்பையர் அவுட் கொடுப்பதற்கு முன்னர் தானாகவே முன்வந்து ஆட்டமிழந்து வெளியேறினார்.