இது தான் தமிழரின் பண்பாடு… சோகத்தில் உறைந்த ரோஹிட் மனைவிக்கு நம்ம தமிழன் அஸ்வின் மனைவி ப்ரீத்தி செய்த செயலை பாருங்க !!

Cricket

நடப்பு ஐ.பி.எல் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேற்ற நடைபெற்ற போட்டியில் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் பார்ம் நேற்றும் தொடர்ந்தது என்று கூறலாம். ஏனெனில் நேற்று துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா அஸ்வின் பந்துவீச்சில் 2 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்து வெளியேறியதும் அதனை கண்ட ரோஹித்தின் மனைவி ரித்திகா மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

இதன் காரணமாக மிகுந்த வருத்தம் அடைந்த அவரை ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரரான அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாராயணன் நேராக சென்று கட்டி அணைத்து தேற்றும் வகையில் அவருக்கு சில ஆறுதல்களை கூறினார். இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒன்றாக பயணித்து வரும் ரோஹித் மற்றும் அஸ்வின் ஆகியோர் மிகச்சிறந்த நண்பர்கள் என்பதும் எங்கு சென்றாலும் இந்திய அணி வீரர்கள் தங்களது குடும்பத்துடனே பயணிப்பதால் வீரர்களை தாண்டி அவர்களது குடும்பத்தினருக்கு இடையேயும் நல்ல புரிதல் உள்ளது.

அந்த வகையில் ரோகித் சர்மாவின் மனைவி வருத்தம் அடைந்த போது அஷ்வினின் மனைவி நேராகச் சென்று அவருக்கு ஆறுதல்களை தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.