‘நான் எண்களை பற்றி மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல. ஆனால் இது எனது இதயத்திற்கு நெருக்கமான எண்’ – ஜேர்சி நம்பர் தொடர்பில் டோனி ஓபன் டாக்

Cricket

தனது ஜேர்சி என் தொடர்பில் மனம் திறந்து பேசியுள்ளார் தல என அழைக்கப்படும் எம்.எஸ். டோனி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பி.சி.சி.ஐ இனால் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடரானது ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 15 தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் சமூகவலைத்தளம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த டோனி தான் ஏன் 7-வது எண் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடுகிறேன் என விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் ‘ 7 என்பது எனக்கு அதிர்ஷ்டமான எண் என்று ஆரம்பத்தில் பலர் நினைத்தார்கள். ஆனால் நான் மிகவும் எளிமையான காரணத்திற்காக தான் அந்த எண்ணைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஜூலை 7 ஆம் திகதி பிறந்தேன். எனவே, 7வது மாதம் 7வது நாள், அதுதான் காரணம்.

எந்த எண் நல்ல எண் என்று பார்ப்பதற்குப் பதிலாக, எனது பிறந்த தேதியை எண்ணாகப் பயன்படுத்த நினைத்தேன். அதே நேரத்தில் பலர் எண் 7-யை அதிஷ்ட எண்ணாக கருதுவதில்லை. நான் எண்களை பற்றி மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல. ஆனால் எண் 7 என் இதயத்திற்கு நெருக்கமான எண் ‘ என தெரிவித்தார் எம்.எஸ். டோனி.

Leave a Reply

Your email address will not be published.