2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 15ஆவது தொடர் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட அரைவாசி லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 5 தடவைகள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் வரிசையாக 8 தோல்விகளை சந்தித்து முதல் அணியாக ப்ளேஓப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், 4 தடவைகள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ப்ளேஓப் வாய்ப்பை இழக்கவுள்ளது.
இந்நிலையில், ஐ.பி.எல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,
மும்பை இந்தியன்ஸ் 9,962 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை அணி 8,811 கோடி ரூபாயுடன் 2-வது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா 8,428 கோடி ருபாயுடன் 3-வது இடத்திலும், லக்னோ 8,236 கோடி ரூபாயுடன் 4-வது இடத்திலும் உள்ளது. டெல்லி 7,930 கோடி ரூபாயுடன் 5வது இடத்திலும், பெங்களூரு 7,853 கோடி ரூபாயுடன் 6-வது இடத்திலும் உள்ளது.
ராஜஸ்தான் 7,662 கோடி ரூபாயுடன் 7-வது இடத்திலும், ஐதராபாத் 7,432 கோடி ரூபாயுடன் 8-வது இடத்திலும் உள்ளது. பஞ்சாப் 7,087 கோடி ரூபாயுடன் 9-வது இடத்திலும், குஜராத் 6,512 கோடி ரூபாயுடன் 10-வது இடத்திலும் உள்ளது. (தொகைகள் அனைத்தும் இந்திய மதிப்பில் உள்ளன.)