இலங்கை அணியில் வாய்ப்பில்லை.. நாட்டை விட்டு வெளியேற (England) முடிவுசெய்த நட்சத்திர இளம் வீரர்

Cricket

இலங்கை டெஸ்ட் அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் ரொஷேன் சில்வா, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கௌண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட தீர்மானித்துள்ளார். இதனால் அவருடைய சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ரொஷேன் சில்வா இலங்கை அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இறுதியாக 2019ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். எனினும், கடந்த மூன்று வருடங்களாக குழாத்தின் மேலதிக வீரராக இணைக்கப்பட்டபோதும், அவருக்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இலங்கையின் உள்ள10ர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிவரும் ரொஷேன் சில்வாவுக்கு இலங்கை தேசிய அணியில் தொடர்ந்தும் விளையாட வாய்ப்பு நிராகரிக்கப்பட்டு வந்தது. இவ்வாறான ஒரு நிலையில் தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலினை கவனத்திற்கொண்டு, ரொஷேன் சில்வா இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாட தீர்மானித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் இறுதி பதினொருவரில் விளையாடுவதற்கான வாய்ப்பில்லை என்ற அச்சத்தை உணர்ந்துள்ள ரொஷேன் சில்வா, பங்களாதேஷில் சென்று மேலதிக வீரராக இருப்பதை விடவும், வாய்ப்பு கிடைத்துள்ள லென்கஷையர் கழகத்தில் விளையாட முடியும் என எதிர்பார்த்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரொஷேன் சில்வா, தனது குடும்பத்துக்காகவும், குடும்பத்தின் தேவைக்காகவும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் லீக் கிரிக்கெட் விளையாட முடிவுசெய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published.