ஜடேஜா தான் கேப்டன் என்பதை கடந்த ஆண்டே முடிவு செய்தேன்.. ஆனால் அவர் அதற்கு சரியானவர் இல்லை – டோனி ஓபன் டாக்

Cricket

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா தலைமை பொறுப்பில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து முதல் முறையாக தற்போதைய தலைவர் எம்.எஸ். டோனி பேசியுள்ளார்.

4 தடவைகள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த நிலையில், தலைமை பொறுப்பில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகினார். இதன் காரணமாக எம்.எஸ். டோனி மீண்டும் தலைமை பதவியை ஏற்றார்.  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

குறித்த போட்டி முடிந்ததும் பேசிய டோனி, ‘அணித்தலைமையை பொறுத்தவரை, இந்த சீசனில் ஜடேஜா தலைமை வகிப்பார் என்று கடந்த ஆண்டே நினைத்தேன். முதல் இரண்டு போட்டிகளில் நான் மேற்பார்வை செய்தேன், அதன் பின்னர் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் தான் பொறுப்பேற்று முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறி விட்டேன். ஆனால் போட்டிகள் செல்ல செல்ல அவருக்கு அழுத்தம் அதிகரித்து, ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாமல் போனது. அதனால் அவரது மனமும் சோர்வடைந்ததால் ஜடேஜா விலகினார்’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.