சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் விளங்குகிறார். ஸ்டெயினின் வருகைக்கு பிறகு புவனேஸ்வர் குமார், உம்ரான மாலிக், டி. நடராஜன், ஜென்சன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி முடிந்ததும் டேல் ஸ்டெயின் தன்னுடைய பழைய ஜெர்சியை டோனியிடம் கொண்டு சென்று ஆட்டோகிராப் கேட்டார். இதற்கு டோனியும் நெகிழ்ச்சியுடன் கையெழுத்து போட்டார். மார்டன் கிரிக்கெட்டில் உலகின் தலைச் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கியவர் ஸ்டெயின். முழு உடல் தகுதியுடன் இருந்த போது ஐ.பி.எல் தொடரிலும் கலக்கியவர். ஆனால் அப்படிப்பட்ட ஸ்டெயினே டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.