டோனியின் அந்த மனசு தான் சார் கடவுள்… ‘ஜடேஜா இந்திய அணிக்கு தேவை. ஐ.பி.எலால் அவரது எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால் இதை ஏற்றுக்கொண்டேன்’

Cricket

ஐ.பி.எல் நடப்பு சம்பியன் மட்டுமல்லாமல் 4 முறை சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்து புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் தடுமாறி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் சிறப்பாக செயற்படக் கூடிய ஜடேஜா கேப்டன் பதவி கிடைத்த பிறகு அழுத்தங்கள் காரணமாக சிறப்பாக செயற்படவில்லை. இப்படி அழுத்தங்களுடன் இருக்கும் இவர், அடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்காக பயிற்சி செய்து வந்தார். அப்போது இவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. தடுமாறியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற அணி கூட்டத்தில் முன்னாள் கேப்டன் டோனி தற்போதைய கேப்டன் ஜடேஜாவை பேச அழைத்தார். அப்போது பேசிய ஜடேஜா, 

‘பயிற்சியின்போது என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் கேப்டன்ஷி அழுத்தம்தான் என நினைக்கிறேன். இன்னமும் 6 போட்டிகள்தான் எஞ்சியிருக்கிறது. இந்த 6 போட்டிகளிலும் கேப்டனாக இருந்தால், எனக்கு அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும். இதனால், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதை தவிர எனக்கு வழியில்லை. இந்த முடிவினை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்’ என யாரும் எதிர்பாராத வகையில் பேசிவிட்டு அமர்ந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து பேசிய டோனி, ‘ஜடேஜாவின் முடிவினை அனைவரும் மதித்துத்தான் ஆக வேண்டும். இந்திய அணிக்கு அவர் தேவை. ஐ.பி.எல் காரணமாக அவரது எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. அடுத்த 6 போட்டிகளுக்கும் தானே தலைமை தாங்குகிறேன்’ எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்துதான் அணி நிர்வாகம் மீண்டும் டோனி கேப்டன் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பை உடனே வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published.