அந்த மனசு தான் சார் கடவுள்.. டெல்லி கெப்பிடல்ஸ் அணி செய்த காரியத்தை பார்த்தீர்களா ! பாராட்டும் ரசிகர்கள்

Cricket

இந்திய நாட்டின் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ஜெர்சியை ஏலம் விட்டு, அதன் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது டெல்லி கெப்பிடல்ஸ் அணி. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி நோ-பால் சர்ச்சை, கொரோனா பரவல் என அசாதாரண சூழலை கடந்து வந்துள்ளது. இந்நிலையில், விளையாட்டு வீரர்களின் நலனுக்காக நிதி திரட்டுகிறது டெல்லி. இதற்காக நடப்பு ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா மற்றும் பெங்கள10ர் அணிகளுக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை ஏலம் விடுவதாக தெரிவித்துள்ளது அந்த அணி. 

வீரர்களின் ஜெர்சியை அதிக விலைக்கு ஏலம் கேட்கும் நபர்கள் அல்லது ரசிகர்களுக்கு சம்பந்தப்பட்ட வீரர்களின் ஆட்டோகிராஃப் உடன் ஜெர்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியை இன்ஸ்பயர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் விஜயநகர் பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வரும் வீரர்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அணியின் தன்வசம் வைத்துள்ள ஜே.எஸ்.டபிள்யூ நிர்வாகம் இந்தப் பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வரும் தனியார் பயிற்சி மையம் இது. இதற்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரமும் வழங்கியுள்ளது. தடகளம், குத்துச்சண்டை, ஜூடோ, நீச்சல் மற்றும் மல்யுத்த விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது இன்ஸ்பயர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்.

Leave a Reply

Your email address will not be published.