‘எங்கள் அணி தோத்தாலும் நாம் இவர்களை நினைத்து பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம்’ – மும்பை ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன கோச் மஹேல

Cricket

நடப்பு ஐ.பி.எல் தொடரில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியால் துவண்டு இருந்தாலும், மகிழ்ச்சியடைவதற்கான செய்திகளும் அணியிடம் இருப்பதாக பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே கூறியுள்ளார். 2 வீரர்களின் ஆட்டம் தங்களை மிகவும் கவர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், அதனால் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இது குறித்து பேசிய பயிற்சியாளர் மகிலா ஜெயவர்தனே, இந்த சீசன் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை எனக் கூறியுள்ளார். ஆனால், ராஜஸ்தான் அணிக்கு எதிராக வெற்றியை பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், அந்த ஆட்டத்தில் மும்பை வீரர்கள் பந்துவீசிய விதம் பாராட்டுக்குரியது எனக் கூறியுள்ளார்.

ஜெயவர்தனே பேசும்போது, ‘ஜோஸ் பட்லர் ஹிருத்திக் ஷோக்கீன் பந்தில் நான்கு சிக்ஸர்களை அடித்தபோது, அவரது விக்கெட் வீழ்த்தும் அணுகுமுறை மிகவும் நன்றாக இருந்தது. குமார் கார்த்திகேயா அற்புதமாக பந்துவீசினார். இதற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டும் சிறப்பாக அமைந்ததால் தங்களால் வெற்றி பெற முடிந்தது’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.