சி.எஸ்.கே அணியின் தோல்விகளுக்கு இவர் தான் முழுக் காரணம் – டோனியை பின் கதவால் குத்திக்காட்டிய சேவாக்

Cricket

2022 ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகளுக்கு காரணம் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சீசன் வரை ஐபிஎல் தொடரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு படு மோசமாக விளையாடி வருகிறது. வெற்றிக்கு அருகில் செல்லும் அந்த அணிக்கு வெற்றி கிட்டுவதில்லை. நடப்பு சாம்பியனின் ஆட்டத்தைக் கண்டு ரசிகர்களே வெதும்பி போய் உள்ளனர்.

தொடரின் தொடக்கத்திலேயே சிஎஸ்கே செய்த தவறுகளை பின்பாயிண்டாக சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, ‘ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜடேஜாவிடம் டோனி கேப்டன்ஷிப்பை ஒப்படைத்திருக்கக்கூடாது. தொடக்கத்தில் இருந்தே டோனி கேப்டனாக இருந்திருந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமான தோல்விகளை சந்தித்திருக்காது அல்லது பிளே ஆப் சுற்று வாய்ப்பிலாவது நீடித்திருக்கும். ஐபிஎல் தொடர் தொடக்கப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், குறிப்பாக பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடவில்லை.

ருதுராஜ் கெய்க்வாட் இப்போது விளையாடுவதுபோல் அப்போது ஆடவில்லை. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடியிருந்தால் சில போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும். சென்னை அணியைப் பொறுத்தவரை, ஆரம்பமே சொதப்பலாக தொடங்கிவிட்டது. அது அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பையும் பறித்திருக்கிறது. தோனி இப்போது மீண்டும் கேப்டன்சியை எடுத்தற்கு, சீசன் தொடகத்திலேயே கேப்டனாக இருந்திருக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.