இனிமே தான் பாக்க போறிங்க.. சானக்க மீது நம்பிக்கை இழந்த இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள்.. தலைமையை ஏற்கும் முன்னாள் கேப்டன் !

Cricket

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணியின் தலைவராக மீண்டும் திமுத் கருணாரத்ன நியமிக்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

சகலதுறை வீரரான தசுன் சானக்க தற்போது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியை வழிநடத்தி வருகிறார். பல இளம் வீரர்களைக் கொண்டு, இலங்கைக்கு கிரிக்கெட்டில் உண்மையிலேயே பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை அண்மைக்காலத்தில் இலங்கை அணியால் நிரூபிக்க முடிந்தது.

திமுத் கருணாரத்க தலைமையில் இலங்கை அணி 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இலங்கை அணி 10 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு அணிகளும் ஒரே தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என திமுத்தின் தலைமைப் பொறுப்பு தசுன் சானக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தசுனின் ஒருநாள் போட்டித் தலைவர் பதவி தற்போதைய டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் ஒருநாள் போட்டித் தலைவராக திமுத் மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இருபதுக்கு 20 அணியின் தலைவராக மாத்திரமே தசுன் சானக்க செயற்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டித் தலைவர் பதவியில் இருந்து தசுன் சானக்கவை நீக்கிவிட்டு, திமுத் கருணாரத்னவை அணித்தலைவராகக் கொண்டு வருவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தசுன் சானக்க மீதான நம்பிக்கையை இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் கைவிட்டுள்ளனர் என்பதே உண்மையானது.

Leave a Reply

Your email address will not be published.