கிரிக்கெட் தான் அனைத்து மேற்கிந்தியர்களையும் ஒன்றிணைக்கும் சக்தியாகும். இது உண்மையில் எனது வாழ்க்கையின் சிறப்பம்சமாகும். – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

Cricket

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட (ஒருநாள், இருபதுக்கு 20) அணியின் புதிய தலைவராக அதிரடி துடுப்பாட்ட வீரரான நிக்கொலஸ் பூரண் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற கிரொன் பொல்லார்ட்டிற்கு பதிலாகவே நிக்கொலஸ் பூரண் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் புதிய உப தலைவருக்காக அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தாண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் மற்றும் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள 2023 ஐ.சி.சி ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆகிய இரண்டிலும் நிக்கொலஸ் பூரண் அணியை வழிநடத்தவுள்ளார்.

அணித்தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் நிக்கொலஸ் பூரண் தெரிவிக்கையில், ‘மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு அற்புதமான பாரம்பரியத்தை உருவாக்கிய பல ஜாம்பவான்களின் அடிச்சுவடுகளை நான் பின்பற்றுகிறேன். இது உண்மையில் ஒரு மதிப்புமிக்க பாத்திரம், மேற்கிந்திய சமுதாயத்தில் ஒரு முக்கிய நிலை, ஏனெனில் கிரிக்கெட் தான் அனைத்து மேற்கிந்தியர்களையும் ஒன்றிணைக்கும் சக்தியாகும். தலைவராக நியமிக்கப்பட்டது உண்மையில் எனது வாழ்க்கையின் சிறப்பம்சமாகும். மேலும் நான் அணியை சிறப்பாக வழிநடத்த விரும்புகிறேன்.’ என பூரான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.