ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய மறைந்த சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சாதனையை இந்திய வீரர் சாஹல் முறியடித்துள்ளார். வார்னே எவ்வளவு பெரிய ஆளு, அவர் சாதனையை முறியடிச்சிட்டாங்களா என்ற நினைக்க தோன்றுகிறது அல்லவா. ‘உண்மை தான். அப்படி ஒரு சாதனையை தான் படைத்து இருக்கார் சாஹல். ராஜஸ்தான் அணியின் மெண்டராக இருந்தவர் வார்னே.
பயிற்சியாளர், கேப்டன் என்ற பொறுப்பை சுமந்து 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வென்று அசத்தியவர் வார்னே. ஒரு சீசனில் வார்னே அதிகபட்சமாக 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் பிறகு எந்த ராஜஸ்தான் அணி சுழற்பந்துவீச்சாளரும் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லை. ஆனால், 2022ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் சாஹல், தற்போது 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சாஹல் ஒரு சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது முதல் முறை அல்ல. கடந்த 8 ஆண்டுகளில் சாஹல் 4 முறை ஒரே சீசனில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இப்படி பட்ட வீரரை தான் ஆர்சிபி அணி ஏலத்திலும் எடுக்காமல், தக்க வைக்கவும் செய்யாமல் கைவிட்டது.