‘முதன்முதலாக சச்சினுக்கு சப்போர்ட் செய்த ஒரே ஆள் நான் தான். ஆனா சச்சினால் தான் எனக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்கவில்லை’ – பகீர் தகவலை வெளியிட்ட யுவாராஜ் சிங்

Cricket

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கர் மீது பகிரங்கமான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இரு உலகக்கோப்பைகளை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்த அவருக்கு, இந்திய அணியின் கேப்டன் பதவி மட்டும் தேடி வரவில்லை. அவருக்கு பின்னர் அணியில் இடம் பிடித்த டோனிக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. இது அப்போது சர்ச்சையாக வெடித்தாலும், யுவராஜ் சிங் இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்தார்.

இப்போது தனக்கு கேப்டன் பதவி கிடைக்காதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் யுவராஜ் சிங். அதில், சச்சினால் தனக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும், அதன் பின்னணியையும் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, ‘கிரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, அவருக்கும் மூத்த வீரர்களான கங்குலி மற்றும் சச்சின் உள்ளிட்டோருக்கும் மனம் ஒத்துப்போகவில்லை. அவருடன் ஒத்துழைக்க மறுத்தார்கள். குறிப்பாக, சச்சினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கிரேக் சேப்பல்.

அந்த நேரத்தில் பயிற்சியாளரா? அல்லது சச்சினா? என்று முடிவெடுக்க வேண்டிய சூழல் இருந்தது. நான் தயங்காமல் சச்சினை தேர்ந்தெடுத்து அவருடன் இருந்தேன். முதன்முதலாக சச்சினுக்கு சப்போர்ட் செய்த ஒரே ஆள் நான் தான். நான் அவ்வாறு செய்தது பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. நான் இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்தபோதும், 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான கேப்டன் தேர்வில் என்னை நியமிக்கவில்லை. தோனியை கேப்டனாக நியமித்தார்கள். இந்த விஷயம் எனக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. இருப்பினும் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை’ என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.