பேட்டை கடித்து சாப்பிட்டார டோனி ? ‘எப்பொழுதும் சுத்தத்தை விரும்புபவர் டோனி’ – பிண்ணனியை வெளியிட்ட மிஸ்ரா

Cricket

2022 ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியுடனான போட்டியில் அதிரடியாக விளையாடிய டோனியின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. வழக்கமாக சிக்சர் மற்றும் பவுண்டரி அடிக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நிலையில், இம்முறை வித்தியாசமான புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான அமித் மிஸ்ராவும் இந்த புகைப்படம் குறித்து கமெண்ட் அடித்துள்ளார்.

டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருக்கும் தோனி, பேட்டைக் கடிக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அமித் மிஸ்ராவும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, தோனி பேட் சாப்பிடுவதற்கு பின்னணி காரணத்தை கூறியுள்ளார். அதில், தோனி பேட்டில் இருக்கும் டேப்பை அகற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு எப்போதும் பேட் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புவார் எனத் தெரிவித்துள்ளார்.

அமித் மிஸ்ரா கூறியதுபோலவே உண்மையில் பேட்டில் இருக்கும் டேப்பை தான் தோனி அகற்றிக் கொண்டிருக்கிறார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரை, ஐபிஎல் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடவில்லை. எனினும் டோனி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார். பேட்டை கடித்த டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.