ஐ.பி.எல் போட்டிகளில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் லிஸ்ட்

Cricket

ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து முதல் ஓவரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் தொடர்பில் நாம் தற்போது அவதானம் செலுத்தலாம். இந்த விதத்தில் மிகப்பெரிய சாதனையாளராக உள்ளார் டிரெண்ட் போல்ட். பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகள் எடுக்கக் கூடியவர் என்பதற்காகவே இவரைத் தேர்வு செய்ய ஏலத்தில் அணிகள் போட்டியிடும். 2022 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் போல்ட் மீண்டும் ஆரம்ப ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்து வருகிறார்.

ஐ.பி.எல் வரலாற்றில் 2020 முதல், முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் போல்ட். அடுத்த இடத்தில் உள்ள வீரர்கள் மிகவும் பின்தங்கியுள்ளார்கள்.

2020 முதல், முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்
13 – டிரெண்ட் போல்ட்
5 – ஜோஃப்ரா ஆர்ச்சர்
4 – தீபக் சஹார்
4 – முகமது ஷமி
4 – முகேஷ் சௌத்ரி
4 – உமேஷ் யாதவ்

Leave a Reply

Your email address will not be published.