நான் இந்திய அணியில் ஆடவே முடியாதா ? சூர்யகுமாருக்கு சோதனை மேல் சோதனை

Cricket

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரரான சூர்யகுமார் யாதவ் இடதுகையின் தசைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகினார். 

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் போது காயம் அடைந்த சூர்யகுமார் யாதவின் நிலைமை குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் உடல் தகுதிநிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக அவரை அணியில் இருந்து விடுவிக்கும் முடிவை எடுத்தது. 

ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் கை பெருவிரலில் காயம் அடைந்ததால் முதல் 2 லீக் ஆட்டங்களை தவற விட்ட சூர்யகுமார் யாதவ் மீண்டும் காயத்தில் சிக்கி இருக்கிறார். அவரது விலகல் மும்பை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும்.

அடுத்த மாதம் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேச தொடருக்கு முன்பாக உடல் தகுதியை எட்டி இந்திய அணியில் இடம் பிடிக்க முடியுமா? என்றகேள்விக்குறி எழுந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.