ஐ.பி.எல் வரலாற்றில் 70 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரைச்சதத்தை பதிவு செய்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
2022 IPL- il நவி மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியில் அஸ்வின் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரைச் சதமெடுத்தார். இது அவருக்கு 71 இன்னிங்ஸாகும். 3ஆம் நிலை வீரராகக் களமிறங்கியதால் அவருக்கு அரைச்சதமெடுக்க முடிந்தது.
ஐ.பி.எல் வரலாற்றில் முதல் அரைச்சதத்தை எடுக்க அதிக இன்னிங்ஸ் தேவைப்பட்ட வீரர்களின் அஸ்வினுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் கிடைத்தது. இதற்கு முன்பு ஜடேஜா, 131 இன்னிங்ஸுக்குப் பிறகு தனது முதல் அரைச் சதத்தை எடுத்தார்.
ஐபிஎல்: முதல் அரை சதமெடுக்க அதிக இன்னிங்ஸ் தேவைப்பட்ட வீரர்கள்
131 – ஜடேஜா
70 – அஸ்வின்