‘இன்னும் இரு குழந்தைகளை பெற்றுக்கொண்டு வாழ்க்கையையும், கிரிக்கெட்டையும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்’ – கோஹ்லிக்கு வோர்னர் அறிவுரை

Cricket

நடப்பு ஐ.பி.எல் தொடரில் பாப் டு பிளெஸிஸ் தலைமையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்கள10ர் அணியில் விளையாடிவரும் விராட் கோஹ்லி முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ஓட்டங்களை மட்டுமே அடித்திருந்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே அதிகபட்சமாக 58 ஓட்டங்கள் எடுத்தார். சமீபத்தில் விளையாடிய சர்வதேச போட்டிகளிலும் விராட் கோஹ்லி சொற்ப ஓட்டங்களையே பெறுகிறார்.

அவர் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துகொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விராட் கோஹ்லி மீண்டும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என்ன அறிவுரை கூறுவீர்கள் என டெல்லி அணி வீரர் டேவிட் வோர்னரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வோர்னர், ‘விராட் கோஹ்லிக்கு ஒன்று தான் சொல்ல விரும்புகிறேன். ‘ஃபார்ம்’ என்பது தற்காலிகமானது. ‘கிளாஸ்’ என்பது தான் நிரந்தரம். எனவே அதை நீங்கள் தவற விடாதீர்கள். உங்களுக்கு இப்போது நடப்பது அனைத்து வீரர்களுக்கும் நடப்பது தான். இன்னும் 2 குழந்தைகளை பெற்றுக்கொண்டு, வாழ்க்கையையும் கிரிக்கெட்டையும் மேலும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.