‘டோனியின் அத்தனை தலைமை பண்புகளையும் இவர் கொண்டுள்ளார். அவர் மிகவும் ‘கூல்’ மற்றும் நிதானமாக செயற்படுகிறார்’ – இளம் கேப்டனை புகழ்ந்த ஆஸி. வீரர்

Cricket

நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த நிலையில் தோனியின் தலைமை பண்புகளை ஹர்திக் பாண்டியா பிரதிபலிப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பேசியுள்ளார்.

பாண்டியா குறித்து அவர் கூறுகையில், ‘எம்.எஸ். டோனியின் விளையாட்டுப் பாணியின் பண்புகளை பாண்டியா-விடம் பார்க்க முடிகிறது. அணி மிகவும் அழுத்தத்தின் கீழ் இருக்கும் எந்தச் சூழ்நிலையிலும் அவர் அமைதியாக செயல்படுகிறார். அவர் மிகவும் ‘கூல்’ மற்றும் நிதானமாக இருக்கிறார். அவரது அணியின் வீரர்கள் அழுத்தத்தில் இருக்கும் பொழுது அவர்கள் அடுத்து என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவான மனநிலையைப் அவர்கள் பெற்று இருக்கிறார்களா என்பதை பாண்டியா உறுதி செய்கிறார்.

தோனியை போல சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாண்டியா செய்யும் மாற்றங்கள் துல்லியமாக இருக்கின்றன. அந்த மாற்றங்கள் விளையாட்டை மாற்றும் தருணங்களாக இருக்கின்றன’ என ஹாக் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.